Friday, February 3, 2012

எஸ்.டி.பி.ஐயின் சேவைக்காக உதவிடுவீர்!


சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் போது துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 60வது வார்டில் எஸ்.டி.பி.ஐ சார்பாக அமீர் சுல்தான் என்பவர் போட்டியிட்டார். அப்போது அந்த வார்டிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடம் தான் ரேவ் பகுதி.





மண்ணடியில் அமைந்திருக்கின்ற பிரபல இறையில்லமான ஈத்கா மஸ்ஜித் பின்புறம் அமைந்திருக்கின்ற இடம் தான் இந்த ரேவ் பகுதி. இங்கே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வாழும் சூழலை பார்க்கும் போது பரிதாபமும் அதே சமையம் இவர்களிடம் ஓட்டை மட்டும் வாங்கிக்கொண்டு இவர்களை பல வருடங்களாக ஏமாற்றி வரும் அரசியல்வாதிகள் மேலும் கடும் கோபம் ஏற்படாமல் இருக்காது. அந்தளவிற்கு மிகவும் சுற்றுச்சூழலற்ற அசுத்தமான பகுதியாக இது காட்சி அளித்து வருகிறது.


முறையான கழிவறை வசதிகள் கிடையாது. பெண்கள் குளிப்பதற்கு என்று ஒழுங்கான இடம் கிடையாது. சாக்கடை அனைத்தும் வீட்டு வாசலிலேயே ஓடக்கூடிய அவல நிலையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.



கடந்த உள்ளாட்சிட் தேர்தலின் போது வாக்குகளைச் சேகரிக்க சென்ற எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் அமீர் சுல்தானிடம் அப்பகுதி மக்கள் தங்களுடைய குறைகளை கூறி தங்களுக்காக உதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்.



அப்போது அமீர் சுல்தான் அவர்கள் தான் வெற்றி பெற்றால் இதனை தூய்மைப்படுத்தும் பணியை 3 மாதத்தில் செய்து தருவேன் என்றும் இல்லையேல் 6 மாத காலத்திலாவது செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் பணம் பலமும் படை பலமும், அதிகார பலமும் கொண்ட அரசியல் வாதிகளை எதிர்த்து போட்டியிட்ட அமீர் சுல்தான் அவர்கள் 1250 வாக்குகளைப்பெற்று 4வது இடத்தை பிடித்தார். அதன் பிறகு அரசியல் துவேஷம் கொண்டவர்கள் அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். 






 அதன் பிறகு துறைமுகம் தொகுதி தலைவர் பொறுப்பை ஏற்ற முஜிபுர் ரஹ்மான் அவர்கள் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தி வருகிறார். அமீர் சுல்தான் சுத்தம் செய்து தருவதாக வாக்களித்த அப்பகுதி மக்களை சந்தித்து இது பற்றி விளக்கம் அளிக்கவும் அதே சமயம் அந்த இடத்தை பார்வையிடவும் தற்போதையை தொகுதி தலைவர் முஜிபுர் ரஹ்மான் சென்றார். இது அம்மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் அந்த இடத்தை திரும்பி பார்ப்பதே இல்லை, ஆனால் தோல்வியடைந்த பிறகும் மக்களை வந்து சந்திக்கின்றனரே என்று ஆச்சிரியப்பட்டனர்.


தற்போது பொருளாதார நெருக்கடியால் அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக முஜிபுர் ரஹ்மான் நமது தளத்திற்கு செய்தி அனுப்பியுள்ளார். 



எனவே இயன்றவர்கள் இச்சேவையை செய்வதற்காக பொருளாதார உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புக்கு:

முஜிபுர் ரஹ்மான்
துறைமுகம் தொகுதி தலைவர் (எஸ்.டி.பி.ஐ)
+91 9940431373

1 comment:

Anonymous said...

Nalla muyarchi. nichyam palan kidaikkum.

Post a Comment