2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் 60 சதவீத அளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, "நாடு பெருமிதம் கொள்ளக் கூடிய வகையிலான தீர்ப்பு இது," என்றார். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அரசின் ஒட்டுமொத்த தோல்வியை காட்டுகிறது என்றவர், "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தடுக்க பிரதமர் தவறிவிட்டார்," என்றார்.
"நான் போதுமான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தேன். மூன்று விவகாரங்களிலும் நீதிமன்றம் முடிவு எடுத்திருக்கிறது.இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரணை செய்வது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் மகிழ்ச்சிக்குரியது," என்றார்.
மேலும், "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த இலக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் 60 சதவீதம், அவரிடம் தான் உள்ளது," என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
No comments:
Post a Comment