Wednesday, February 22, 2012

கள்ளச்சந்தைகளுக்கு எதிரான 7846 இணையதளங்கள் முடக்கம். சீன அரசு அதிரடி !


சீனாவில் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்ட 7846 இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளன.  ஆன்லைன் கள்ள சந்தைகளுக்கு எதிராக சீனாவில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


சட்டவிரோதமாக ஆயுதங்கள், வெடிபொருட்கள், ரசாயனங்கள் விற்பனையை களையெடுக்கும் விதமாக இந்த இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 



இதுதொடர்பாக 905 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 53 கிரிமினல் கும்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான 12 லட்சம் ஆன்லைன் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment