Wednesday, February 8, 2012

கர்நாடகா சட்ட சபையில் ஆபாச படம் பார்த்த பாஜக அமைச்சர்கள் !

Karnataka minister caught watching porn video in his Mobile.
கர்நாடக சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல்போனில், ஆபாச படம் பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த, பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் உற்சாகமாகப் பார்த்தார். 

கர்நாடக சட்டசபை கூட்டத்தில், நேற்று மதியம்,எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். சித்தராமையா பேச்சை, முதல்வர் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இந்த விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்து, அதில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்துக் கொண்டிருந்தார். இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிடுகையில், "அமைச்சர் ஆபாச படம் பார்த்த சம்பவம், சட்டசபை வரலாற்றில் கறுப்பு தினமாகும். அமைச்சர் லட்சுமண் சவதி, அமைச்சராகத் தொடர அருகதையில்லை. இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு பா.ஜ., தலைவர்கள் என்ன சொல்லப்போகின்றனர். என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்' என்றார்.

கர்நாடக அமைச்சர் லட்சுமண் சவதி குறிப்பிடுகையில், "மொபைல் போனில் ஆபாச படம் எதுவும் பார்க்கவில்லை. அதை பார்த்ததில் தவறு எதுவுமில்லை. என்னிடம் இருந்தது என் மொபைல் போனல்ல. நான் பார்த்தது, டாக்குமெண்ட்ரி படம். இதை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தேன் என்று கூறுவது சரியல்ல. அமைச்சர் கிருஷ்ண பலேமர், இந்த மொபைல் போனை என்னிடம் கொடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதை பாருங்கள் என்று என்னிடம் கொடுத்தார். கிருஷ்ண பலேமருக்கு யாரோ அவரது மொபைல் போனுக்கு "எம்.எம்.எஸ்.,' அனுப்பியுள்ளனர்' என்றார்.

இச் சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடக சட்டசபையில் இன்று, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

1 comment:

Anonymous said...

THERINDHA VISHAYAMDHAAN. BJP YIN UNMAI MUGATTHAI IPPODHAAVADHU MAKKAL PURINDHU KOLLATTUM.
SULAIMAN SAIT

Post a Comment