Wednesday, February 1, 2012

கூடன் குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீதான தாக்குதல்: SDPI கடும் கண்டனம்


கூடன் குளம் அணு உலைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர். இன்னும் 106 வது நாளாக இடிந்த கரை கிராமத்தில் அகிம்சை வழியில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போராட்ட குழுவினர் மீது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைதியாக நடைபெற்று வரும் போராட்டத்தை திசை திருப்பி கலவரக் காடாக்கும் இந்து முன்னணியின் முயற்சியே இது. இதன் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். காங்கிரசும், இந்து முன்னணியும் இணைந்து செயல்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

தங்கள் உயிருக்கு ஆபத்து என முன் கூட்டியே போராட்டக்குழுவின் புகார் தெரிவிததிருந்தும் ஏன் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றிருப்பது வருந்தத்தக்கது.  சிறுபான்மை சமுதாயம் மற்றும் ஏனைய சமுதாயத்தை சேர்ந்த அமைப்புகள் மீது கடுமை காட்டும் காவல்துறை, கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி போன்ற அமைப்புகளிடம் மென்மையாக நடந்து கொள்வதாலேயே இத்தகைய தைரியத்தை அவர்கள் பெறுகிறார்கள்.

எனவே காவல்துறை இந்து முன்னணி மற்றும் தாக்குதல் நடத்திய விஷமிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு கூடங்குளம் பகுதியில் அமைதியை நிலை நாட்ட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment