Thursday, June 14, 2012

கடும் அச்சத்தில் உள்ளனர் "கண்டீலா" முஸ்லிம்கள்!


உத்தர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ளது "கண்டீலா" கிராமம்.  சிறிய கிராமமான இங்கு 70 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு "காசிமுல் உலூம்" என்ற பெயரில் கடந்த 3 ஆண்டுகளாக மதரசா ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மாணவர்கள் உட்பட பல வெளியூர் மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் ஆண்டு விழா வரும் 17ந்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு, போஸ்டர் மற்றும் நோட்டீஸ்களும் அச்சிடப்பட்டன. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வெளியூரிலிருந்து சில ஆலிம்களை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 


நேற்று மக்ரிப் தொழுகையின்போது உள்ளூரை சேர்ந்த 300 குண்டர்கள் மதரசாவை சூழ்ந்து கொண்டு, மதரசாவின் முதல்வர், காரி குலாம் ரப்பானியை நோக்கி ஆவேசமாக திட்ட ஆரம்பித்தனர்.  இந்த மதரசாவில் விழா நடத்தக்கூடாது, அப்படியே நடத்துவது என்றாலும் வெளியூரிலிருந்து எவரையும் அழைக்கக்கூடாது, போஸ்டர் ஓட்டக்கூடாது, ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது போன்ற ஏகப்பட்ட "கூடாது" நிபந்தனைகளை விதித்தனர். விளக்கம் சொல்ல முற்பட்ட போது, கடும் கலவர சூழலை உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். 



மேலும் மதரசா முதல்வரை தாக்கியும் உள்ளனர். இதனால் பயந்து போன முதல்வர், 17ந்தேதிநடக்கவிருந்த ஆண்டு விழாவை ரத்து செய்து விட்டார். மேலும் நேற்று மாலை முதல் அவரை காணவில்லை. அவரது வீட்டிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது குடும்பத்தினர், முதல்வரை பற்றி விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் அங்கு தங்கு படித்து வந்த வெளியூர் மாணவர்கள் 25 பேரும் சொல்லாமல் கொள்ளாமல், பீதியப்பட்டு மதரசாவை விட்டு இரவோடிரவாக போய் விட்டனர். மதரசா பூட்டு போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் தாதாக்களின் மிரட்டல்களை போலீசுக்கு தெரிவித்தால்,  உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்றிருந்தாலும், 70 குடும்பங்கள் மட்டுமே உள்ள எங்களால் எதிர்காலத்தில் எப்படி நிம்மதியாக வாழ முடியும் என்று கேட்கிறார் உள்ளூர் பிரதிநிதி இக்பால் அஹ்மத். 


இது குறித்து விசாரிக்க, தற்போது மாவட்ட "ஜமியதுல் உலமா" துணைத்தலைவர் மவுலானா பர்கதுல்லாஹ் உள்ளிட்ட சமுதாய பிரமுகர்கள், சம்பவ கிராமத்துக்கு விரைந்துள்ளனர். இந்த ஊர் "ஷாம்லி"  மற்றும் "கீரானா" வுக்கு மத்தியில் உள்ளது. இதன் சட்டமன்ற உறுப்பினர் பா.ஜ.க.,வை சேர்ந்த உக்கம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment