Thursday, June 14, 2012

வஞ்சிக்கப்படும் முஸ்லிம்கள் : என்னமோ நடக்குது; ஏதோ நடக்கப்போகுது!

மத்திய அரசு இட ஒதுக்கீடும் விஷயம் ஒரு புறமென்றால், தமிழக அரசு ஏற்கனவே உள்ள ஒதுக்கீட்டையும் அமல் படுத்த மறுக்கிறது. தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். 

அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.கடந்தமுறை நியமிக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5% வழங்கப்பட்டது. 


இப்படி ஆளும் வர்க்கங்களாலும், நீதிமன்றங்களாலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் முஸ்லிம் சமூகம், எத்தனை நாளைக்கு பொறுமை காக்கும்? முஸ்லிம்களின் குரல் வலைகளை தொடர்ந்து இப்படி நசுக்குவதை பார்க்கும் போது, இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏதோ நடக்குது என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. ஜனநாயக நாட்டில் தொடர்ந்து இப்படி நீதி மறுக்கப்பட்டால், பாதிக்கப்படுவோரின் பதிலடிகளை பற்றி ஆட்சியாளர்கள் சிந்தித்து தங்களை சரி செய்து கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

No comments:

Post a Comment