உலகின் மிகப் பெரிய குடியரசு இந்தியா என்பதும் இந்தியாவின் குடியரசுத்தலைவருக்கான தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறதுஎன்பதும்குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர்கள் திரு.பிரனாப் முகர்ஜியும்திரு.சங்கமாவும் என்பதும் நாம் அனைவரும் அறிவோம். ஆனால்,குடியரசுத்தலைவருக்கான தேர்தல் எப்படி நடக்கிறது ? அதற்கான விதிமுறைகள்என்ன? இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் நோக்கமே இந்த பதிவு….
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யார் போட்டியிடலாம் ?
இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவருக்கான தேர்தலில்போட்டியிட பின் வரும் அனைத்து தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்:
1) இந்திய குடிமகன்
2) வயது – 35 அல்லது அதற்கு மேல்
3) பாராளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதி
இதனோடு கூட, ஒருவர் அரசாங்கத்தின் பதவியில் இருந்து கொண்டு ஆட்சிபொருப்பின்
நிமித்தம் பொருளுதவி பெறுபவராக இருத்தல் கூடாது.எனினும், பின் வரும் பொருப்பு
வகிப்பவர்கள் குடியரசுத் தலைவர்பதவிக்கு போட்டியிடலாம்:
1) துணை குடியரசுத் தலைவர்
2) மாநில ஆளுநர்
3) மத்திய மற்றும் மாநில அமைச்சர் (பிரதான மந்திரியும் மாநிலமுதலமைச்சரும் இதில் உள்ளடங்குவர்)
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, குடியரசுத் தலைவராக போட்டியிடுபவர்,அவரைத் தேர்ந்தெடுப்பவர்களில்,50 பேரால் முன் மொழியப்பட்டு 50பேரால் வழி மொழியப் படவேண்டும்….15,000 இந்திய ரூபாய் வைப்புத் தொகையாக கட்டவேண்டும். ஆறில்ஒரு பங்கு ஓட்டு பெறாவிட்டால், வைப்புத் தொகை பறி போகும்.
யார் தேர்ந்தெடுப்பார்கள் குடியரசுத் தலைவரை ?
இந்திய குடிமகனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை உறுப்பினர்கள் சேர்ந்துகுடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள். சட்டசபை உறுப்பினர்கள்மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைதேர்ந்தெடுப்பதற்கும் தேர்தலில் வாக்களிப்பார்கள்.
தேர்தலும் தேர்வும்…
தேர்தலின் விதிப்படி சட்டசபை உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கையுடன் சமமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு சட்டசபை உறுப்பினரின் ஓட்டும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை ஆயிரத்தினால் வகுத்து வரும் விடையைஅந்த மாநிலத்தின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு வகுப்பார்கள். இது தான், ஒவ்வொரு சட்டசபை உறுப்பினருக்கும் உண்டான வாக்கு.
மாநிலத்தின் மக்கள் தொகை / 1000 = A.
A / மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை = ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு (மாநில வாரியாக இது வேறுபடும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த ஒட்டு மதிப்பு சட்டசபையின் மொத்த ஓட்டு மதிப்புடன் சமமாக இருக்க வேண்டும். இதன் படி,ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு (மாநில வாரியாக), அந்தந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு பெறுக்க பட்டு,இந்தியாவின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த மதிப்பு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுக்கப் படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிபின் கூட்டுத் தொகை / பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை = ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாநில வாரியான கட்டமைப்பு புரிதலில் உதவியாய் இருக்கும். (மக்கள் தொகை – 1971 census படி – இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும்…..)

A
State / UT
|
1971 Census
|
1971 Census divided by 1000
|
# of MLA
|
Value of Each MLA's Vote
|
Total Value of MLA's Votes
|
UP
|
83,849,905
|
13px
|
403
|
83824
| |
Andaman
|
0
| ||||
AP
|
43502708
|
43502.71
|
294
|
43512
| |
Arunachal
|
467511
|
467.511
|
60
|
480
| |
Assam
|
14625152
|
14625.15
|
126
|
14616
| |
Bihar
|
42,126,236
|
42126.24
|
243
|
42039
| |
Chandigarh
|
0
| ||||
Chattisgarh
|
11,637,494
|
11637.49
|
90
|
11610
| |
Dadra
|
0
| ||||
Daman
|
0
| ||||
Goa
|
795,120
|
795.12
|
40
|
800
| |
Gujarat
|
26,697,475
|
26697.48
|
182
|
26754
| |
Haryana
|
10,036,808
|
10036.81
|
90
|
10080
| |
HP
|
3,460,434
|
3460.434
|
68
|
3468
| |
J&K
|
6,300,000
|
6300
|
87
|
6264
| |
Jharkand
|
14,227,133
|
14227.13
|
81
|
14256
| |
Karnataka
|
29,299,014
|
29299.01
|
224
|
29344
| |
Kerala
|
21,347,375
|
21347.38
|
140
|
21280
| |
Lakshadweep
|
0
| ||||
Maharashtra
|
50,412,235
|
50412.24
|
288
|
50400
| |
Manipur
|
1,072,753
|
1072.753
|
60
|
1080
| |
Meghalaya
|
1,011,699
|
1011.699
|
60
|
1020
| |
Mizoram
|
332,390
|
332.39
|
40
|
320
| |
MP
|
30,016,625
|
30016.63
|
230
|
30130
| |
Nagaland
|
516,449
|
516.449
|
60
|
540
| |
New Delhi
|
4,065,698
|
4065.698
|
70
|
4060
| |
Orissa
|
21,944,615
|
21944.62
|
147
|
21903
| |
Pondicherry
|
471,707
|
471.707
|
30
|
480
| |
Punjab
|
13,551,060
|
13551.06
|
117
|
13572
| |
Rajasthan
|
25,765,806
|
25765.81
|
200
|
25800
| |
Sikkim
|
209,843
|
209.843
|
32
|
224
| |
TN
|
41,199,168
|
41199.17
|
234
|
41184
| |
Tripura
|
1,556,342
|
1556.342
|
60
|
1560
| |
Uttarkhand
|
4,491,239
|
4491.239
|
70
|
4480
| |
WB
|
44,312,011
|
44312.01
|
294
|
44394
| |
Total
|
233
|
4,120
|
549,474
| ||
# Number of MP's
|
766
| ||||
Value of MP's Vote
|
717
|
ஒற்றை வாக்கு மாற்று முறைப்படி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அது எப்படி என்கிறீர்களா ?
4 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். தேர்தலில் வெற்றி பெற 51 சதவீத வாக்குகள் பெற வேண்டும். ஒவ்வொரு சட்டசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வாக்களிக்கும் போது போட்டியிடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்...
A – 7000 ; B – 6000 ; C – 4000 ; D – 3000 என வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம் (முதல் முன்னுரிமையின் படி). மொத்த வாக்குகள் – 20,000. வெற்றி பெற10001 வாக்குகள் பெறவேண்டும். யாரும் பெறவில்லை.
கடைசி இடத்தில் வந்தவர் பந்தயத்தில் தோற்றுவிட்டதாக கருதப்படுவார். அவருடைய முதல் முன்னுரிமை (First Preference) வாக்குகள் – 3000. இந்த 3000 வாக்குகளின் இரெண்டாவது முன்னுரிமை – A – 1000 ; B – 1500 ; C – 500 என வைத்துக் கொள்வோம்.

மொத்த வாக்குகள் = A – 8000 (7000 + 1000) ; B – 7,500 (6000 + 1500) ; C – 4,500 (4000 + 500).
இந்த நிலையிலும் யாரும் 10,001 வாக்குகள் பெறவில்லை. C பந்தயத்தில் தோற்றதாக கருதப்படுவார். C பெற்ற 4,500 வாக்குகள் Aக்கும் Bக்கும் மூன்றாவது முன்னுரிமை (Third Preference) படி பிரிக்கப்படும். A – 1500 ; B – 3000 என வைத்துக் கொண்டால், A – 9,500 ; B – 10,500 வாக்குகள் பெற்று, B வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார்.
இதுதான் ஒற்றை வாக்கு மாற்று முறை.
என்ன தோழர்களே ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது என்ற நுட்பத்தை அறிந்து கொண்டீர்களா? இப்படித்தான் நம்மைச் சுற்றி நிகழும் நிறைய நிகழ்வுகளின் மறைமுக நேர்முக பங்கேற்பளாராக நாம் இருந்தும் அந்த அந்த நிகழ்வுகளின் முழு உண்மைகளை அறிந்திராதவர்களாக நாம் இருக்கிறோம்..!
பெரும்பாலான நாடளுமன்ற உறுப்பினர்களையும், மற்ற கட்சிகளின் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் வேட்பாளரே ஜனாதிபதியாகும் சூழல் தற்போது இருந்தாலும்....இந்திய அரசியல் சுழற்சி எதை வேண்டுமானலும் எப்படி வேண்டுமானலும் திருப்பிப் போடும் என்பதால், நாம் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை காத்திருப்போம்..நமது தேசத்தின் முதற் குடிமகனாகப் போகிறவர் யாரென்று அறிய....!
No comments:
Post a Comment