Saturday, June 16, 2012

அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி, மீண்டும் முஸ்லிம்களை கருவறுக்க திட்டம்?!


முஸ்லிம் என்ற பெயரை தவிர அப்துல் கலாம் அவர்களால், முஸ்லிம்களுக்கு ஒரு பலனும் இருந்ததுமில்லை இருக்கப்போவதும் இல்லை.
2002ல் குஜராத் கலவரம் நிகழ்ந்த அதே ஆண்டு, பா.ஜ.க.,வினால்  ஜனாதிபதியாக்கப்பட்ட அப்துல் கலாம், குஜராத் இன அழிப்புக்கு எதிராக, ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை. எனவே தான், அடுத்தடுத்து அப்துல் கலாமையே ஜனாதிபதியாக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. 


கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதுபதி தேர்தலிலும் அப்துல் கலாமையே கடைசி வரை முன் நிறுத்தியது பா.ஜ.க.  இப்போது, மம்தா குரல் மூலம் பா.ஜ.க. தான், இந்த திட்டம் வகுத்து வருகிறது.  முஸ்லிம் சமூகத்துக்கு முற்றிலும் எதிரியாக உள்ள பா.ஜ.க., அப்துல் கலாமை ஆதரிப்பதில் காரணங்கள், மிக அதிகம். 



அப்துல் கலாம் பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும், அவரது, மாணவர் பருவம் முதல், பிராமணர் சமூகத்தின் கோட்பாடுகளில் மிகவும் ஒன்றி வாழ்ந்து வருபவர் கலாம். காஞ்சி சங்கராச்சிரியாரின் தீவிர பக்தர் அவர்.  "குர்ஆன்" குறித்து அவர் பேசியதை விட "பகவத் கீதை"யைபோதித்ததே அதிகம். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், காஞ்சி சங்கராச்சியாரை சந்திக்க வந்திருந்த அவரை, சங்கர மடத்தை ஒட்டிய பள்ளி வாசலுக்கு, மிகவும் சிரமப்பட்டு அழைத்து சென்றனர். அப்போது, அங்கு "அரபி" கல்வி பயின்று வந்த மாணவர்கள் குறித்து, ஏன் இப்படி இவர்களது நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறீர்கள், என்று திருவாய் மலர்ந்தவர் தான் மேதகு அப்துல் கலாம்.  


அவர் ஜனாதிபதியாக இருந்த போது "மாணவர்கள் சந்திப்பு" என்றும், மாணவர்களுடன் "கலந்துரையாடல்" என்றும், பா.ஜ.க. அரசால் சிலாகித்து சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அவர் சந்தித்த மாணவர்கள் எல்லாம் "வித்யா மந்திர்" போன்ற ஆர்.எஸ்.எஸ்., சங்க பரிவாரங்களால் நடத்தப்படும் பள்ளி மாணவர்களைத்தான், என்பதை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். சாதாரண அரசு பள்ளி மாணவர்களையோ, அடித்தட்டு மாணவர்களையோ அவர் அதிகம் சந்தித்ததில்லை. முஸ்லிம் சமூகத்தோடு எந்த ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளவில்லை. குஜராத் கலவரத்தின் போது, பா.ஜ.க., பிரதமர் வாஜ்பேயி கூட நரேந்திர மோடியை கண்டித்து "ராஜ தர்மத்துடன்" நேர்மையாக நடந்துக்கொள்ளுங்கள், என்று கடிதம் எழுதினார். ஆனால் அப்துல் கலாம் நரேந்திர மோடியுடன் கொஞ்சி குலாவியவர், என்பது குறிப்பிடத்தக்கது. 


குஜராத் கலவரத்தின் போது அப்துல் கலாமை தவிர, யார் ஜனாதிபதியாக இருந்திருந்தாலும்,  முஸ்லிம்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்திருக்கும் என்பதே உண்மை.

No comments:

Post a Comment