Monday, April 2, 2012

KIFF நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" நிகழ்ச்சி

Inline image 1குவைத்: குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்க விழா 30/03/2012 அன்று மங்காஃப் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த பிரச்சாரம் 30/03/2012 முதல் 30/04/2012 வரை தொடர்ந்து நடைபெறும்.சரியாக காலை 7:30 மணிக்கு ஆரம்பம் ஆனது அதை சகோதரர் கிபாயத்துல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சி அனைத்தையும் தொகுத்து வழங்கினார். 

Inline image 5
பின்னர் சகோதரர் ஹசன் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.அதன் பிறகு ஆரோக்கியம் சம்பந்தமான புத்தகம் வெளியிடப்பட்டது.அதை KIFF-இன் தலைவர் அப்துல் சலாம் வெளியிட KIFF-இன் தமிழ் பிரிவு தலைவர் அம்ஜத் அலி அவர்கள் பெற்று கொண்டார்கள்.அது தமிழ்,மலையாளம்,கன்னடம்,இங்கிலீஷ்,உருது என 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.


அதன் பிறகு சகோதரர் சைபுதீன் மௌலவி அவர்கள் உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் "தனி மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனில் நாம் கவனம் செலுத்துவது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதது.நம்மில் பலருக்கு ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்ச்சி இல்லை அவ்வாறு ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்ச்சி வழி வாழ முயர்ச்சியும் இல்லை பெரும்பாலானவர்கள் மருந்து மாத்திரைகளை உட்கொண்ட பிறகு தான் தினசரி அலுவல்களையே தொடங்குகிறார்கள்" என்று நாம் நமது ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை விவரித்தார்.
Inline image 2
மேலும் உடற்பயிச்சியின் செய்முறை விளக்கங்களை சகோதரர் ஷம்நாத் விளக்கி கூறினார்.அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.அதன் பிறகு கயிறு இழுக்கும் போட்டியும்,மாரத்தான் போட்டியும் நடைபெற்றது.அதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது.

Inline image 6Inline image 3மாரத்தான் போட்டியில் முதல் இடம் பிடித்த சகோதரர் சபீர் அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பஹ்ரைன் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரத்தின் பிரதிநிதி சகோதரர் ராஷித் பதக்கத்தை வழங்கினார்.இரண்டாம் இடம் பிடித்த சகோதரர் அஷ்பாக் அவர்களுக்கு KIFF-இன் தமிழ் பிரிவு பிரதிநிதி ராசிக் அவர்கள் பரிசு வழங்கினார்,மற்றும் சகோதரர் சிகபுதீன்(கேரளா), சிராஜ்(கர்நாடகா) அவர்களும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் சகோதரர் சிராஜ் அவர்கள் நன்றியுரையுடன் சிறப்பாக நிறைவுற்றது.இதில் இறநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments:

Post a Comment