Sunday, April 15, 2012

குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் நடத்திய ஆரோக்கிய வாழ்விற்கான கருத்தரங்கம்


குவைத்:குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் (KIFF) ஒரு மாத காலம் நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (13/04/2012) ஜம்மியத்துல் இஸ்லாஹி ரவ்தா ஆடிட்டோரியத்தில் வைத்து கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.சரியாக மாலை 6:45 மணிக்கு சகோதரர் அப்துல் பாரி அவர்கள் திருமறை குர்ஆன் வசனங்கள் ஓத சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.நிகழ்ச்சி முழுவதையும் சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களே தொகுத்து வழங்கினார்கள்.


பின்னர் KIFF-ன் தலைவர் அப்துல் சலாம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் இந்நிகழ்ச்சிக்கான முக்கியத்துவத்தையும் தேவையையும் எடுத்து கூறினார்.அதன் பிறகு ஜம்மியத்துல் இஸ்லாஹி தலைவர் டாக்டர்.சுலைமான் ஷெட்தி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.இஸ்லாத்தில் உள்ள உணவு முறைகளை பற்றி விரிவாக கூறிய அவர், இதற்கு ஏற்பாடு செய்த KIFF-க்கு பாராட்டுக்களை தெரவித்தார்.



அதன் பிறகு "இஸ்லாமும் ஆரோக்கியமும்" என்ற தலைப்பில் டாக்டர்.அப்துல் ரகுமான் (ஜஹ்ரா அரசு மருத்துவமனை)அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்."நீங்கள் அல்லாஹ்வை நினைவு கொண்டால் உங்களுடைய மனது எந்தவித குழப்பமும் இன்றி சாந்தமாக இருக்கும்,அது உங்களுடைய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்,இதை மனதில் உறுதியாக ஏற்றுக்கொண்டு நபிமார்களும்,ஷஹாபாக்களும் தங்களுடைய வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு அளித்த முக்கியத்துவத்தை பற்றி விரிவாக கூறினார்.மேலும் அன்றாட வாழ்க்கையில் நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும்,அதன் நன்மை தீமைகள் பற்றியும் அழகுற எடுத்துரைத்தார்.


அதை தொடர்ந்து "இதயநோய்கள்" என்ற தலைப்பில் டாக்டர்.தாமஸ் ஐசக் (அல்-ஷபா மருத்துவமனை) அவர்கள் உரையாற்றினார்.இதயம் எவ்வாறெல்லாம் நம்முடைய நடவடிக்கையின் மூலம் பாதிக்கப்படுகின்றது, அதை எப்படியெல்லாம் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்று இதயம் சம்பந்தமான ஒரு தெளிவான விளக்கங்களை கூறினார்.


மேலும் திரு.ஹஷன் யூசுப் (தலைவர்,கர்நாடகா முஸ்லிம் வெல்பேர்), திரு.பஷீர் (தலைவர்,KKMA(D.K) விங்) போன்றோகள் இந்நிகச்சிக்கான தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள்.


இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் பேண வேண்டிய உடற்பயிர்ச்சிகளை (ஆசனங்களை) KIFF-ன் தன்னார்வ தொண்டர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.


இறுதியாக சகோதரர்.சிராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.இதில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.KIFF-ன் தன்னார்வ தொண்டர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.    

1 comment:

Anonymous said...

ஐ.பி.எல். போன்ற சோம்பேறித் தனமான விளையாட்டை வெறியாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சர்க்கரைக்கொன்று, ப்ரஷுருக்கொன்று, கொழுப்பைக் குறைக்க ஒன்றென்று மாத்திரைகளை விழுங்கி, நித்திரையில் ஆழ்ந்து போகும் இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியமான நிகழ்வு இது.

இஸ்லாத்தின் கடைமைகளைச் செவ்வனே செய்து வந்தால் கூட மட்டும் போதுமானது, நம் உடல் ஆரோக்கியமாய் இருக்கும். தினந்தோறும் ஐவேளை தொழுவது ஒரு மிகச் சிறந்த உடல் பயிற்சி. அதையும் குறித்த நேரத்தில் செய்வதின் மூலம் நேரந்தவறாமை என்ற ஒழுக்கமும் நமக்கு சாத்தியமாகிறது. அடிக்கடி ஒழு செய்வதின் மூலம் நம் தோளின் மேற்புறத்தில் உள்ள கிருமிகள் கழுவப்படுகின்றன. நோன்பு மிகச் சிறந்த உணவுக் கட்டுப்பாடு முறையைப் போதிக்கிறது. நாம் எதனை உண்ண வேண்டும், எதனை தவிர்க்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் அழகான முறையில் இரண்டே வார்த்தைகளில் "ஹலால்" மற்றும் "ஹராம்" என்று பிரித்து அறிவிக்கிறது. உண்ண வேண்டிய அளவை அழகாய் "உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள்" என்று நெற்றிப் பொட்டில் அடித்தது போன்று தெள்ளத் தெளிவாக குரான் நமக்கு சொல்லித் தருகிறது.

யாரும் தொடத் தயங்கும் ஒரு தலைப்பை எந்த கமர்சியல் கலாட்டாக்களும் இல்லாமல் கொடுத்த குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் அன்பர்களுக்கு ஒரு ராயல் ஷலூட்.

- தமிழன்

Post a Comment