டெல்லி: இந்தியாவில் ராணுவப் புரட்சிக்கு முயற்சிகள் நடந்ததாக வெளிவந்துள்ள செய்தியை பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துள்ளார். இந்திய ராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது சரியல்ல என்று பிரதமர் மன்மோகன் கூறியுள்ளார்.
வயது பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ராணுவ தளபதி வி.கே.சிங் வழக்கு தொடர்ந்திருந்தபோது மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் கடந்த ஜனவரியில் ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் தலைநகர் டெல்லியில் குவிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமருக்கு உளவுத்துறை தகவல் கொடுத்ததாகவும், அதன் பிறகு அந்த ராணுவப் பிரிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை இதனை பிரதமர் மன்மோகன் சிங்கும், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனியும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ராணுவ தளபதியின் பதவியை யாரும் கொச்சைப்படுத்த முயலக் கூடாது என்றார்.
ஆண்டனி கூறுகையில், ராணுவத்தின் இதுபோன்ற நடமாட்டம் ஒன்றும் புதிதல்ல, வழக்கமானதுதான். ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்திய ராணுவம் இறங்காது. ராணுவத்தின் நாட்டுப்பற்று குறித்து எவரும் சந்தேகம் எழுப்ப முடியாது. ராணுவத் தளபதியின் அலுவலகத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் இந்தச் செய்தி கொச்சைப்படுத்துவதாகவும். ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகவும், .நமது ராணுவத்தின் மதிப்பையும் மரியாதையையும் குறைக்கும் வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடக் கூடாது என்றார்.
No comments:
Post a Comment