Thursday, April 19, 2012

கண்டம் விட்டு கண்டம் பாயும் 'அக்னி-5' ஏவுகணை சோதனை வெற்றி!


Agniபுவனேஸ்வர்:  5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை இன்று காலை 8.05 மணிக்கு ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 
அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5,000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா மட்டும் தான் இதுவரை வைத்திருந்தன. தற்போது அந்த பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

அக்னி ஏவுகணை நேற்று இரவு 7 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை சரியில்லாத சூழலால் இன்று காலை ஏவப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும்.

திபெத் எல்லைப் பகுதியில் சீனா ஏவுகணைகளைக் குவித்து வரும் நிலையில் இந்தியாவின் அதிநவீன அக்னி ஏவுகணை சோதனை குறிபிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment