Wednesday, April 18, 2012

டெல்லி தேர்தல் : முஸ்லிம் சிறைக்கைதியை தோற்கடிக்க, காங்கிரஸ் - பா.ஜ.க., கூட்டணி!

அப்பாவி சிறைக்கைதி, ஜியாவுர் ரஹ்மான் 8,195 ஓட்டுக்கள் பெற்று சாதிக்காவிட்டாலும், 7,677 ஓட்டுக்களை பெற்று சரித்திரம் படைத்து விட்டார். வெற்றிக்கும் தோல்விக்கும் 517 வாக்குகள் தான் வித்தியாசம்.
பொய்யான குற்றம் சுமத்தி, குஜராத் சபர்மதி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஜியாவுர் ரஹ்மான் குடும்பத்தினர், தனது மகன் மீது சுமத்தப்பட்ட பழியை போக்க, டெல்லி ஒக்லா, ஜாமியா நகர் 205வது வார்டு தேர்தலில், ஜெயிலில் இருந்த படியே ஜியவுர்ரஹ்மானை, போட்டியிட செய்தனர். அநீதிக்கெதிராக மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்தாலும், அரசியலில் சதி மற்றும் சூழ்ச்சிகள் செய்து, பா.ஜ.க.,வுடன் மறைமுக கூட்டணி அமைத்து, காங்கிரஸ் வேட்பாளர் ஷுஐப் தானிஷ், 517 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார்.

டெல்லி மாநகராட்சியில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., இங்கு பெற்ற வாக்குகள் 445 மட்டுமே. பி.எஸ்.பி., வேட்பாளர் ஜிதேந்தர் குமார் 4,954 ஓட்டுக்கள் பெற்றுள்ள நிலையில், ஜியவுர்ரகுமானை தோற்கடிக்க, பா.ஜ.க., காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து, தனது டெபாசிட்டையும் இழந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது, முஸ்லிம் பகுதியில் மிக அதிக ஓட்டுக்களுடன் முன்னணியிலிருந்த ஜியாவுர்ரகுமான், பொதுப்பகுதியில், அங்குள்ள பாஜக ஓட்டுக்களை காங்கிரஸ் பக்கம் திருப்பப்ட்டிருந்ததை காண முடிந்தது.

ஆறுதலான ஒரே விஷயம், வெற்றி பெற்ற வேட்பாளர் ஷோயப் தானிஷ், கருத்து தெரிவிக்கையில், ஜியாவுர்ரஹ்மான் குற்றமற்றவர் - மிகவும் நல்லவர், என நற்சான்று வழங்கினார். எனினும் நடைபெற்ற தேர்தல் உள்ளாட்சி மன்றங்களின் வளர்ச்சி அடிப்படையில், அமைந்த தேர்தல் என, விளக்கமளித்தார். 22 வயது ஜியாவுர்ரஹ்மான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment