Wednesday, April 11, 2012

மும்பை அருகே அரபிக் கடலிலும் நிலநடுக்கம்


மும்பை: மும்பை அருகே அரபிக் கடலில் இன்று 3.4 அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிம் மும்பை அருகே அரபிக் கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 155 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4க பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் ராஜீவ் நாயர் தெரிவித்துள்ளார்.

வடமும்பையில் உள்ள சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சுனாமி ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment