Tuesday, April 24, 2012

ஜூன் 12ம் தேதி புதுக்கோட்டை இடைத்தேர்தல்- 15ல் வாக்கு எண்ணிக்கை


டெல்லி: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மே 18ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் மே 25. மனுக்கள் மே 26ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மே 28 ஆகும்.

ஜூன் 12ம் தேதி வாககுப் பதிவு நடக்கும். ஜூன் 15ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை தவிர ஜூன் 12ம் தேதி ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் 26 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஆந்திராவில் நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடக்கவுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இன்று காலையே அதிமுக தனது புதுக்கோட்டைக்கான வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment