சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இருபது ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் தேர்வாகி இருக்கிறார்.
ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ள ஹாக் நகரில் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தல்வீர் பண்டாரி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பிலிப்பைன்ஸ் நீதிபதி புளோரின்டினோ பெலிசியானோ போட்டியிட்டார்.
ஐ.நா. பொது சபையில் நடந்த தேர்தலில், 122 ஓட்டுகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 பேரில் 13 பேரின் ஓட்டுகளை தல்வீர் பண்டாரி பெற்று வெற்றி பெற்றார். புளோரின்டினோ 58 ஓட்டுகள் பெற்றார். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் கடந்த 1988 முதல் 1990 வரை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி உள்ளார். தற்போது 64 வயதாகும் நீதிபதி தல்வீர் பண்டாரி, 20 ஆண்டுகளுக்கு மேலாக நீதித் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
No comments:
Post a Comment