Wednesday, April 18, 2012

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்துவோம்- எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை


Petrolடெல்லி: பெட்ரோல் மீதான கலால் வரியை (excise duty) மத்திய அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்துவோம் என்று மத்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவரான ஆர்.எஸ்.புடோலா கூறுகையில், ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ. 14.78 கலால் வரி விதிக்கப்படுகிறது. இதை நாங்கள் மத்திய அரசுக்கு செலுத்துகிறோம். இப்போது ஒரு லிட்டரை பெட்ரோல் விற்பதால் எங்களுக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துவிட்டாலும், டிசம்பர் மாதத்துக்குப் பின் பெட்ரோல் விலையை நாங்கள் உயர்த்தவில்லை (5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை மனதில் வைத்தும், திரிணமூல் காங்கிரஸ்-திமுக மிரட்டலாலும் மத்திய அரசு விலையை உயர்த்த விடவில்லை). இதனால் ஒரு நாளைக்கு பெட்ரோல் விற்பனையால் மட்டும் எங்கள் நிறுவனத்துக்கு ரூ. 49 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

எங்களுக்கு ஏற்படும் இந்த இழப்பை மத்திய அரசு தர வேண்டும் அல்லது விலையை லிட்டருக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை உயர்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

இனியும் எங்களால் கடன் வாங்கி பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய முடியாது என்றார்.

பெட்ரோல் விலையை உயர்த்த அனுமதிக்கிறார்களோ இல்லையோ, அதன் மீதான கலால் வரியை குறைக்கச் செய்யவே இந்தக் கருத்தை புடோலா தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

பெட்ரோல் தவிர டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸை குறைந்த விலைக்கு விற்பதால் மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினந்தோறும் ரூ. 573 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment