Friday, April 27, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 32 அமைச்சர்கள் உட்பட 43 பேர் கொண்ட அதிமுக பணிக் குழு அறிவிப்பு


Jayalalitha
சென்னை: புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பணியாற்ற அமைச்சர்கள் உட்பட 43 பெர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை அதிமுக அறிவித்துள்ளது.
இதில் 32 பேர் அமைச்சர்கள். தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் எண்ணிக்கை ஜெயலலிதாவையும் சேர்த்து 33தான். இதில் தன்னைத் தவிர அத்தனை அமைச்சர்களையும் அவர் புதுக்கோட்டைக்கு அனுப்புவது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துக்குமரன் சாலை விபத்தி உயிரிழந்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து

புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக கார்த்திக் தொண்டமானை அதிமுக அறிவித்துள்ளது. அவர் இன்று முதல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்.

இதனிடையே புதுக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பேர் கொண்ட குழுவை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல் நிலை அமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் முதல் கடை நிலை அமைச்சரான எம்.எஸ்.எம். ஆனந்தன் வரை அத்தனை பேரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

கடந்த சங்கரன்கோவில் இடைத் தேர்தலிலும் கூட இப்படித்தான் அத்தனை அமைச்சர்களையும் களம் இறக்கி மற்ற கட்சிகளை மிரள வைத்தார் ஜெயலலிதா. தற்போதும் அதே பாணியில் அத்தனை அமைச்சர்களும் புதுக்கோட்டைக்குப் புறப்படுகிறார்கள். இதனால் கோட்டை வட்டாரம் தேர்தல் முடியும் வரை வெறிச்சோடிப் போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிடுவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிலையில் அதிமுக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment