Friday, April 20, 2012

நெகடிவ் வாக்குகள் அதிகமானதால், டைம்ஸ் இதழின் பட்டியலில் இடம்பெறாத மோடி.


Why modi is not in Times Magazine?அமெரிக்காவை சேர்நத டைம்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பேர் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடம்பெற்றிருப்பதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகின் சக்தி வாய்ந்த 100 பேர் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம்ஸ் இதழ் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த பெருமையை மக்களுக்கும், தாய் மண்ணுக்கும் அர்ப்பணிப்பதாக மம்தா தெரிவித்துள்ளார். 

இந்த பட்டியலுக்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரையும் டைம்ஸ் இதழ் பரிசீலனை செய்தது. ஆனால் அவருக்கு எதிராக அதிக அளவில் நெகடிவ் வாக்குகள் விழுந்ததால் இந்த பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.

இந்நிலையில் சக்தி வாய்ந்த 100 பேர் பட்டியலில் இடம் பிடித்த மம்தா பானர்ஜிக்கு நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். நரேந்திர மோடியின் புகைப்படம்  அண்மையில் டைம்ஸ் மேகசினின் அட்டை படத்தில் வெளியானது. எனினும் அவரால் சக்தி வாய்ந்த 100 நபர்கள் பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment