Wednesday, April 4, 2012

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: ப. சிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் மனு மீது ஏப்ரல் 11 முதல் விசாரணை


P Chidambaramடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை வரும் 11ம் தேதி முதல் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரும் மனுவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.



இம்மனுக்களை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 11 முதல் 13ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தது.



மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தற்போதைய நிலைமை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு மற்றும் தொலைத் தொடர்புத்துறையினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையை 3 வார காலத்துக்குள் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



ப. சிதம்பரத்தை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சேர்க்கக் கோரி ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் வழக்கை ந்டத்தும்சி.பி.ஐ. நீதிமன்றமே இது தொடர்பாக முடிவெடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.



இதையடுத்து சி.பி.ஐ. நீதிமன்றத்திலும் சாமி மனுத் தாக்கல் செய்தார். ஆனால் ப.சிதம்பரத்தை விசாரிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துவிட்டார்.



இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சாமி மனுத்தாக்கல் செய்தார். 



இதேபோல் முறைகேடாக அலைவரிசை உரிமம் பெறுவதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு ப.சிதம்பரம் உதவினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment