Sunday, October 23, 2011

மோடிக்கு எதிராக அமிக்கஸ் க்யூரி உச்சநீதிமன்​றத்தில் அறிக்கை தாக்கல்

amicus curiae rprt SIT
அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென சிறப்பு புலனாய்வு ஏஜன்சி(எஸ்.ஐ.டி)யின் அறிக்கையை அங்கீகரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி(ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு பாரபட்சமற்ற ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்)அறிக்கை அளித்துள்ளது.
குஜராத் இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாக்கியா ஸாப்ரி அளித்த வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை மோடிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் இனக்கலவர வேளையில் போலீஸில் உயர்பதவி வகித்த சஞ்சீவ் பட் உள்பட உயர் அதிகாரிகளை மேலும் விசாரிக்கவேண்டும் என அமிக்கஸ் க்யூரி பரிந்துரைச் செய்கிறது. ராஜு ராமச்சந்திரனின் அறிக்கையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தால் இந்திய தண்டனை சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் மோடியின் மீது வழக்கு பதிவுச்செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிக்கஸ் க்யூரியின் அறிக்கை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்பொழுது இவ்வறிக்கை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவிடம்(எஸ்.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டுள்ளது.



சமுதாயங்களிடையே பிளவை ஏற்படுத்தியதற்கும், பொது நல ஊழியர் என்ற அந்தஸ்தில் இருந்துக்கொண்டு குற்றம் புரிந்ததற்கும் இந்திய தண்டனை சட்டம் 153, 166 பிரிவுகளின் படி வழக்கு பதிவுச்செய்து விசாரணை நடத்தவேண்டும் என அமிக்கஸ் க்யூரி அறிக்கை பரிந்துரைக்கிறது.
கலவர வேளையில் மோடியின் நிலைப்பாடுகளை விமர்சித்த எஸ்.ஐ.டி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக வி.ஹெச்.பியை சார்ந்தவரை நியமித்ததை கடுமையாக கண்டித்தது. ஆனால், மோடிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீதான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர எஸ்.ஐ.டி அறிக்கை அளித்திருந்தது.
ஏற்கனவே மோடியின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை கைது செய்து ஜாமீன் இல்லாத பிரிவுகளில் வழக்கு பதிவுச்செய்து அவரை நீண்டகாலம் சிறையில் அடைக்க மோடி மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் நீதிமன்றம் அவருக்கு அளித்த ஜாமீனால் தவிடுபொடியானது. அதற்கு அடுத்து தற்பொழுது அமிக்கஸ் க்யூரி மோடிக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்துள்ளது உண்ணாவிரத நாடகமாடி பிரதமர் கனவில் மிதக்கும் மோடிக்கு கடும் சவாலாக அமையும் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment