Friday, October 21, 2011

இருட்டடிப்பு செய்யப்பட்ட பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு ஊடகங்கள் கொண்டுவருவதில்லை – சிறுபான்மை கமிஷன்


இருட்டடிப்பு செய்யப்பட்ட பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு ஊடகங்கள் கொண்டுவருவதில்லை – சிறுபான்மை கமிஷன்

wajahath habibullah
புதுடெல்லி:இருட்டடிப்பு செய்யப்பட்ட பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதில் ஊடகங்கள் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை என தேசிய சிறுபான்மை கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
ஆயுத கலவரத்திற்கு பிந்தைய செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் அதிக பொறுப்புடன் கூடிய அணுகுமுறையை கையாளவேண்டும் என தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் கூறியுள்ளார். ஆதரவான, எதிர்மறையான பங்கினை ஊடகங்கள் வகிக்கின்றன. குற்றவாளிகளை குறித்து எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
1987-ஆம் ஆண்டு ஹாஷிம்புராவில் நடந்த கலவரத்தை உதாரணமாக கொண்டு அவர் இதனை தெரிவித்தார். வழக்கில் 40 இளைஞர்கள் சந்தேகத்தின் நிழலில் வைக்கப்பட்டு பின்னர் இவர்களது உடல்கள் கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. வழக்கின் விசாரணை தற்பொழுதும் தொடருகிறது. குற்றவாளிகளான அதிகாரிகள் மீது இதுவரை குற்றம் சுமத்தவில்லை. இவ்வழக்கில் நீதியை கோருவதில் ஊடகங்கள் தோல்வியை தழுவியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment