Monday, January 9, 2012

ஆப்கானிஸ்தான்: அமெரிக்க படையின் அட்டூழியம்


ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பக்ராம் சிறையில் கைதிகள் கடுமையாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் கண்டுபிடித்துள்ளது.

எவ்வித ஆதாரமும் இல்லாமல் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என குல்ரஹ்மான் தலைமையிலான விசாரணை கமிஷன் கூறுகிறது.

பக்ராம் விமானதளத்தை ஒருமாதத்திற்குள் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நேற்று முன்தினம் அதிபர் கர்ஸாய் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் விசாரணை கமிஷனின் கண்டுபிடிப்புகள் வெளியாகி உள்ளன.

சிறைக் கைதிகளிடம் இருந்து வாக்குமூலம் சேகரித்ததன் மூலம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கமிஷனுக்கு தெரியவந்தது. கமிஷனின் விசாரணையில் வெளியான சித்திரவதைக் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என காபூலில் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

பக்ராம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் பரிமாற்றம் குறித்து அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும், ஆப்கான் அரசுக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய சிறையான பக்ராமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment