கீழே நீங்கள் காணும் படமானது இன்று தினமலர் நாளிதழில் நெஞ்சினிலே ஆல்பம் பகுதியில் இடம் பெற்ற படம் தான் அது.
பசுவின் பக்கதி
தீ மிதிக்கும் பசு: மகர சங்கராந்தியை முன்னிட்டு,
பெங்களூரு மல்லேஸ்வரம் மைதானத்தில் நடந்த
"சங்கராந்தி கோ உற்சவா' நிகழ்ச்சியில், தீ மிதித்த பசு.
மனிதன் தீ மிதிகின்றான் என்றால் அவன் தனது பகுத்தறிவை பயன்படுத்தி? கடவுள் என்று ஒன்று இருக்கின்றது. அந்த கடவுளுக்கு இது போல பல தேவைகள் இருக்கிறது. கடவுள் நம் தேவையை நிறைவேற்றினால் அந்தகடவுள் நம்மை இதுபோல் வருத்தி கொள்ள விரும்புகின்றான் என்ற அடிப்படையில் தீ மிதிகின்றான். அது அவனின் கடவுள் நம்பிக்கை இது மூட பழக்கம்மா இல்லையா என்ற விவாதத்திற்கு நாம் செல்லவேண்டாம். அதை பற்றி விவாதிக்க நிறைய பேர் இருக்கின்றனர்.
ஆனால் ஒரு பகுத்தறிவற்ற வாயில்லா ஜீவனை கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் இப்படி தீயில் நடக்கவைத்து துன்புறுத்துவது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. இதை கடவுள் பக்தி என்று சொல்லுவதா? அல்லது பைத்திய காரத்தனம் என்றுசொல்லுவதா?. உனக்கு கடவுள் பக்தி அதிகமானால் நீ தீயில் இறங்கு அல்லது நாக்குல வேல் குத்திக்க அல்லது என்ன வேண்டுமானாளும் செய்துகொள். உன்னை யாரும் எதுவும் செய்ய போவது
இல்லை.
இந்த வாயில்லாத ஜீவனை வருத்துவது அனைத்து சாமானிய மனிதருக்கும் மூடபழக்கம் என்று தெரியும். ஆனால் இந்த தினமலர் நாளிதழ் இதை அங்கீகரிப்பது போல படத்தை வெளியிட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை விட சமூக பொறுப்பில் அதிக அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டிய ஒரு நாளிதழ் அதை அங்கீகரிப்பது போல செய்தி வெளியிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
இதை நான் எந்த மதத்தையும் புண்படுத்த வேண்டும் என்பர்த்காக சொல்ல வில்லை. கடவுள்நம்பிக்கை என்பது அவரவர் மனம் சார்ந்தது, அது அவர்களின் தனிபட்ட உரிமை. ஆனால் ஒரு நாளிதழ் அப்படி இருக்க கூடாது அது சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்க்க்காகவே இதை எழுதுகின்றேன்.
நான் பார்த்த வரையில் தினமலர் நாளிதழ் சமூக பொறுப்பற்ற ஒரு பத்திரிக்கையாகவே இன்று வரை தனது செய்திகளை வழங்கி வருகின்றது. என்னை பொறுத்தவரையில் தினமலர் மக்களால் புறக்கணிக்க வேண்டிய ஒரு நாளிதழ். இந்த மக்கள் என்றுதான் சிந்திக்க போகின்றர்களோ தெரியவில்லை.
நன்றி:kalamarudur
நன்றி:kalamarudur
2 comments:
புறக்கணிக்க வேண்டிய இந்த தினமலம் திருந்த போவதில்லை!
ஹசன்
குவைத்
indha photovudan sedhiyai makkalukku puriya vaikka vendum. pls spread this message to all urs.
Sulaiman sait.(PFI)
Post a Comment