Monday, January 16, 2012

இந்தியா: பாபர் மசூதி இடிப்பு கெட்ட சம்பவம் அல்ல - இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சொல்கிறார்


1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பாபர் மசூதி சம்பவம் தொடர்பாக பிஜேபி தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே உள்ளிட்ட 18 நபர்கள் மீது குற்ற சதித்திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரு சாதாரண சம்பவமே என்றும் அது அத்துணை பிரபலமான நல்ல சம்பவமோ அல்லது கெட்ட சம்பவமோ அல்ல என்று உச்சநீதி மன்றம் இன்று கூறியுள்ளது.

1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பா.ஜ.க, சிவசேனா தலைவர்கள் பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்களாக நீடித்த வழக்கில் அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது அலகாபாத் உயர் நீதி மன்றம். மேலும் அவர்கள் மீதான பிற வழக்குகளை ராபரேலி உயர்நீதிமன்றத்தில் வழக்காடுமாறும் சொன்னது. 

அதை தொடந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த வருடம் மார்ச் 4 அன்று அத்வானி, பால் தாக்கரே, கல்யாண் சிங், உமா பாரதி, சதிஷ் பிரதான், பன்சால், முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார், அசோங் சிங்கால். கிரிராஜ் கிஷோர், சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட 21 நபர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்பியது உச்ச நீதிமன்றம். 

இன்று தொடர்ந்த அவ்வழக்கில் அரசின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் புகழ் பெற்ற பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்புடைய வழக்கு என்பதை நினைவுபடுத்திய போது பாபர் மசூதி இடிப்பு சம்பவமும் ஒரு சம்பவம் தானே தவிர அது ஒன்றும் புகழ் பெற்ற நல்ல சம்பவமோ அல்லது கெட்ட சம்பவமோ அல்ல என்று நீதிபதிகள் தட்டு மற்றும் பிரசாத் கூறினர்.

நன்றி: இந்நேரம்.com

No comments:

Post a Comment