Thursday, January 26, 2012

எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும் - ஜூலியன் அசாஞ்ச் ?


"விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், உலகின் முக்கிய ஆளுமைகளுடன், தான் பேட்டி எடுக்கும் தொடர் ஒன்றை விரைவில் துவங்கப் போவதாக அறிவித்து உள்ளார். 


அசாஞ்ச் தற்போது தன் மீதான பாலியல் வழக்கில் சுவீடனுக்கு நாடு கடத்தப்படும் விவகாரத்தில் சிக்கியுள்ளார். பிரிட்டனில் தங்கியுள்ள அவர் நேற்று இணையதளத்தில் விடுத்த அறிக்கை: "தி வேர்ல்டு டுமாரோ' என்ற தலைப்பில், 10 பாகங்களாக இந்த தொலைக்காட்சித் தொடர் வெளியாகும். இதில் உலகின் முக்கிய அரசியல்வாதிகள்,சிந்தனையாளர்கள், புரட்சியில் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட ஆளுமைகள் பலர் கலந்து கொள்கின்றனர். 



இத்தொடரின் நோக்கம், எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும்? லட்சிய சமுதாயமான யுட்டோப்பியாக இருக்குமா? அல்லது அதற்கு எதிர்மாறானதாக இருக்குமா? என்பது பற்றி இத் தொடர் அலசி ஆராயும். இத்தொடர், மார்ச் மாத மத்தியில் இருந்து துவக்கப்படும், என்றார். 

No comments:

Post a Comment