Monday, January 16, 2012

தமிழ்நாடு: புதிய தலைமை செயலக கட்டடத்தில், வரும் ஜூலையில் மருத்துவமனை திறக்கப்படும் ?



சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமை செயலக கட்டடத்தில், சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலையில் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
டெண்டரில் பங்கேற்க, வரும் ஜன., 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; அன்றே டெண்டர் திறக்கப்பட்டு, இறுதி செய்யப்படும். முதல் கட்டப்பணிகள், 25 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படுகின்றன.


தள்ளிப்போக வாய்ப்பு: இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, வரும் ஏப்., 14ம் தேதி திறக்கப்படும் என, தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் சில மாதங்கள் தாமதமாகும் என தெரிகிறது. சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""முதலில் டெண்டர் இறுதி செய்து, கட்டட அமைப்பை மாற்றி, பின் தேவையான மருத்துவ கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டும்; மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். எனவே, ஜூலை மாதத்தில் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும்,'' என, தெரிவித்தார்.

எந்த தளத்தில் எந்த பிரிவு
தரைதளம் இதய நோய் மற்றும் நரம்பியல் சிகிச்சை
முதல் தளம் புறநோயாளிகள், புற்றுநோய் புறநோயாளிகள், ரத்தக்குழாய் சிகிச்சை, கை சீரமைப்பு
2ம் தளம் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஆராய்ச்சி
3வது தளம் இதய நோய் சிகிச்சை
4வது தளம் புற்றுநோய் சிகிச்சை
5வது தளம் அறுவை சிகிச்சை அரங்குகள்
6வது தளம் அறுவை சிகிச்சை அரங்கு, தீவிர சிகிச்சை
நன்றி: ஞாமுத்து

No comments:

Post a Comment