சென்னையில் கடந்த 14-01-2012 அன்று ஃபாசிச பத்திரிக்கையான சோவின் துக்ளக் ஆண்டு விழாவிற்கு பாபர் மசூதி இடிப்பு புகழ் அத்வானி, இனஅழிப்பிற்கான தலைவர் நரேந்தர மோடி போன்றோர் கலந்து கொண்டு பட்டிமன்றம் நடத்தினர்.
ஏற்கனவே பிஜேபிக்குள்ளேயே பிரதமர் வேட்பாளருக்கு குடுமிச்சண்டை நிகழ்கிறது.இப்போது சோவின் மூலம் தானும் அந்த ரோஸில் சேர்ந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயா மறைமுகமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பிஜேபிக்குள்ளேயே பிரதமர் வேட்பாளருக்கு குடுமிச்சண்டை நிகழ்கிறது.இப்போது சோவின் மூலம் தானும் அந்த ரோஸில் சேர்ந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயா மறைமுகமாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற பெரும்பாலான குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ் தான் என்பது இப்போது மக்களுக்கு தெளிவாக தெரிகிறது. அதை மறைப்பதற்கு தான் அன்னா ஹசாரோ வை வைத்து ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து மக்களை திசை திருப்பி ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைத்தார்கள் அது இப்போது கானல் நீராக மாறிவிட்டது.
அடுத்து என்ன செய்ய என்று யோசித்து நரேந்தர மோடி ஹைடெக் உண்ணாவிரதம் இருந்தார், அத்வானி ரதயாத்திரை சென்றார்,ஆனால் அதுவும் இப்போது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை தேர்தல் வருவதற்கு முன் எப்படியாவது மக்களை திசை திருப்ப வேண்டும் என்று எண்ணிக்கைக்கொண்டிருக்கும் போது சோ மேடையில் "பிஜேபி அறுதிப்பெரும்பான்மை பெறவில்லை என்றால் ஜெயலலிதாவை பிரதமராக்க பிஜேபி ஆதரவு தரவேண்டும்" என்று கூறியது பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவில் உள்ள ஃபாசிச சக்திகளுக்கு சற்றே ஆட்டம் கொடுத்திருக்கும்.
சந்தடி சாக்கில் சிந்து பாடிவிடலாம் என்று ஆற்றங்கரை கொக்காக பாசிச ஜெயா காத்து கொண்டிருக்கிறார்.எப்படியாவது பிஜேபி பிரதமர் பதவியை விற்றுவிடும் என்று ஆனால் மக்கள் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முஹம்மது அபூபக்கர்
No comments:
Post a Comment