கூகிள் தனது 6 பயன்தரும் சேவைகளை அவற்றின் மேம்படுத்தல்களுக்காக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதில் முக்கியமானது போட்டோக்களை மேருகேட்ட உதவும் இணையத்தளமான பிக்னிக் ஆகும். "போட்டோவை எடிட் செய்து மெருகேற்ற வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் ஒரு புரோகிராமை நகலிறக்கம் செய்து, வேலையை முடிக்க நேரம் இல்லை என்பவர்களுக்கு (தூரி)கை கொடுத்த ஆன்லைன் ஃபோட்டோ எடிட்டர் பிக்னிக் வெப்சைட்டை கூகிள், ஏப்ரல் 19, 2012-ஆம் தேதி மூடப்போகிறது.
நினைவுப் பரிசாக, இதுவரை காசு வாங்கிக்கொண்டு கொடுத்த பிரிமியம் வசதிகளை, மூடும் தேதி வரை இலவசமாகவே அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூகிள் சொல்லிவிட்டது. பிரிமியம் வசதிகளுக்கு காசு கட்டி, சந்தா இன்னும் காலாவதி ஆகாமல் இருப்பவர்களுக்கு மொத்த காசும் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்கள்.
'அப்படின்னா அதில் நான் வைத்த ஃபோட்டோக்கள் என்ன ஆகும் ' என்று கேட்கும் முன் ஜாக்கிரதை முத்துகள் Picnik Takeout போய் தங்கள் புகைப்பட வண்ணங்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது கூகிள் +ல் காப்பி செய்து வைத்துக்கொள்ளலாம். பிக்னிக்கின் எதிர்காலம் டார்க்ரூம் மாதிரி இருண்டு போய்விட்டதே நினைப்பவர்களுக்கு ஒரு பளிச் செய்தி. அதன் வசதிகளை கூகிள் ப்ளஸ்ஸில் Creative Kit என்ற பெயரில் சேர்க்கப் போகிறார்களாம்.
அங்கே போய், அது இன்னும் நல்லா டெவலப் ஆனா ஸ்மைல் ப்ளீஸ்னு யாரும் சொல்லாமலேயே நாம் சந்தோஷப்பட மாட்டோமா. என்ன? என சுதந்திர மென்பொருள் என்ற வலைப்பதிவில் தெரிவித்திருக்கின்றார். மென்பொருள் பிரபு" இவற்றை விட Google Message Continuity (GMC), Google Sky Map,Needlebase,Social Graph API,Urchin போன்ற சேவைகளையும் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது கூகிள்.
பிக்னிக் தளத்திற்கு செல்ல - http://www.picnik.com/
No comments:
Post a Comment