Sunday, January 8, 2012

தமிழ்நாடு: நெல்லை ஏர்வாடியில் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்.


ஏர்வாடி:அறிவியல்,விஞ்ஞானத் துறை ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க நோய்களும் அதன் தாக்கங்களும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாக புற்று நோயினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. நகர்புறம் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் இதன் தாக்கம் காணப்படுகின்றது. 
இதில் மார்பக புற்றுநோயானது மிகவேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் இப்புற்று நோயை குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டு கொள்ளவும் மருத்துவ முகாம்களை நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலம் முழுவதும் நடத்த இருககின்றது.  
இதன் ஒருபகுதியாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இன்று (ஜனவரி-8-ஆம் தேதி) அல்ஹுதா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது.மதியம் மருத்துவ முகாம் 2.30 மணிக்கு ஆரம்பமாகியது.மழையையும் பொருட்படுத்தாமல் சகோதரிகள் ஆர்வமுடன் வந்தனர்.இம்முகாமில் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்,தனிநபர் ஆலோசனை மற்றும், குழந்தையின்மை குறித்த இலவச தனி நபர் ஆலோசனை சிறப்பாக நடைபெற்றது.  
அதன் ஒரு பகுதியாக டாக்டர் அன்புராஜன்(இயக்குனர், பீஸ் புற்றுநோய் மையம் ) அவர்களின் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மேலும் புற்றுநோய் குறித்து நமது சகோதரிகள் கேட்ட கேள்விகள் டாக்டரையே வியப்பூட்டும் விதத்தில் இருந்ததாக டாக்டர் அன்புராஜன் அவர்கள் தெரிவித்தார்.   
பெண்கள் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு டாக்டர் மங்கையர்க்கரசி( ராயல் மருத்துவமனை திருநெல்வேலி ) பதில் அளித்தார்.மேலும் நிகழ்ச்சியை தாய்மார்கள் சிரமமின்றி கண்டுகளிக்க ஏதுவாக குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் டாக்டர் . அன்புராஜன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.
இதில் சுமார் 400 பெண்களும் 50 மேற்பட்ட குழந்தைகளும் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்ச்சியானது நெல்லை ஏர்வாடி.காம் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.கருத்தரங்கம் முடிந்த பின்னர் 5.30 pm முதல் 7.30 pmவரை தனிநபர் ஆலோசனை நடைபெற்றது இதில் 70 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

No comments:

Post a Comment