ஒடிசா மாநிலம் குர்டா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களுக்கும் இந்நோய் பரவும் முன்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
குர்டா மாவட்டத்தில் ஏராளமான கோழிப் பண்ணைகள் உள்ளன. அங்குள்ள பண்ணைகளிலும் பெரும்பாலும் கறிக்கோழிகளே உற்பத்தி செய்யப்படுகின்றன.
மத்திய அரசின் ஆலோசனையின்படி, இந்த மாவட்டத்துக்கு அதிரடி நடவடிக்கை குழு அனுப்பி வைக்கப்பட்டது. கேரங்கா பகுதியில் உள்ள தனியார் கோழிப் பண்ணைக்குச் சென்ற இக்குழுவினர், நோயால் பாதிக்கப்பட்ட 4 கோழிகளையும், ஆயிரக்கணக்கான முட்டைகளையும் அழித்தனர். பூமியை ஆழமாக தோண்டி அதில் போட்டு அவை புதைக்கப்பட்டன.
கால்நடை மருத்துவ குழுவும் அங்கு முகாமிட்டு, நோய் பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கேரங்கா தாலுகாவில் 19 கிராமங்களில் கால்நடை மருத்துவ குழுவினர் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் மட்டும் 35 ஆயிரம் கறிக்கோழிகளை அழிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment