Saturday, January 7, 2012

இந்தியா: அன்னா ஹசாரே குழுவில் உள்ள சாந்தி பூஷன் மீது ரூ.27 லட்சம் அபராதம்


இந்தியாவின் சமூக சேவகர்  அன்னா ஹசாரே குழுவைச் சார்ந்த சாந்தி பூஷன் மீது முத்திரைத் தாள் கட்டணத்தை குறைவாக மதிப்பீடு கட்டியதற்காக ரூ.27 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவின் சமூக சேவகர் அன்னா குழுவின் உருப்பினரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான சாந்தி பூஷன் அகலாபத் நகரில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 1970 களில் குடும்பத்தோடு வசித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பரில் அந்த வீட்டை சாந்தி பூஷன் விலைக்கு வாங்கினார்.இது தொடர்பாக முத்திரைத் தாள் உதவி ஆணையர் கே.பி.பாண்டே பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது , 84 ஆயிரம் பரப்பளவு கொண்ட அந்த நிலம் மற்றும் அதில் கட்டப்பட்டுள்ள வீட்டின் சந்தை மதிப்பு ரூ.20 கோடி ஆகும். 
இதன் அடிப்படையில் ரூ.1.35 கோடி முத்திரைத் தாள் தீர்வை செலுத்த வேண்டும்.ஆனால் ரூ. ௫ இலட்சம் மதிப்பு என்று குறிப்பிட்டு வெறும் ரூ. 46 ஆயிரத்து 700 மட்டுமே முத்திரைத் தாள் தீர்வை சாந்தி பூஷன் செலுத்தி உள்ளார். 
அரசை ஏமாற்றியதற்காக சாந்தி பூஷனுக்கு ரூ. 27 இலட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.முத்திரைத் தாள் தீர்வையுடன் சேர்த்து மொத்தம் ரூ. 1.62  கோடியை ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சாந்தி பூஷன் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.         

No comments:

Post a Comment