Sunday, January 22, 2012

தலிபானுடன் அமெரிக்கா ரகசிய உடன்பாடு - ஆப்கான் ராணுவ தளபதி கூறுகிறார்.

அமெரிக்க அரசுடன் தலிபான்கள் ரகசிய உடன்பாடு செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக ஆப்கான் ராணுவ தளபதி அப்துல் கரீம் குர்ரம் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது, தலிபான்களுடன் அமைதிக்கான பேச்சு நடத்துவதற்காக கத்தாரில் அலுவலகம் திறக்க அமெரிக்கா அனுமதித்தது, இந்த அலுவலகத்தை ஆப்கானில் திறக்கவே நாங்கள் விரும்பினோம் இருப்பினும் தலிபான்களுடனான போர் முடிவுக்கு வர விரும்பியே நாங்கள் அதனை ஆதரித்தோம். 



அமைதி பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அரசு ஆப்கான் அரசுக்கு சரியான தகவல்களை அளிப்பதில்லை. பாகிஸ்தானில் வசித்து வரும் தலிபான் தலைவர்கள் கத்தாரிலுள்ள அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர், இதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் உதவி புரிகின்றனர்.


தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் பங்கேற்கிறதா என அமெரிக்கா எங்களுக்கு தெரியபடுத்த வேண்டும். ஆனால் அமெரிக்கா இதற்கான பதிலை அளிக்கவில்லை. தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையில் ஆப்கான் இல்லையெனில் அது ஆக்கபூர்வமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment