Tuesday, January 17, 2012

இந்திய இறையாண்மைக்கு ஏற்பட்ட சோதனை !!

தலைமுறைகளை கடந்து ஒரு வழக்கு நடைபெறுகின்றது என்று சொன்னால் அது கண்டிப்பாக பாபர் மஸ்ஜித் வழக்காக மட்டும் தான் இருக்கமுடியும் . 


அதில் இன்றளவும் நீதி மறுப்புக்கு ஆளாக்கப்பட்ட சமூகம் முஸ்லிம் சமூகம் .௧௯௯௨ ல் இந்தியாவின் வரலாற்றை பறைசாற்ற கூடிய நினைவு சின்னங்களில் ஒன்றான பாபர் மஸ்ஜிதை இடித்து இந்த இந்துதீவிரவாதிகள் தான் என்பது நாடறிந்த உண்மை, அதை தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களும் அதில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் என்று எண்ணிலடங்கா தேசிய அவமானங்களுக்கு நீதி கோரும் வழக்கு தான் இந்த பாபர் மஸ்ஜித் வழக்கு. 

இந்த பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு வெறும் ஒரு சம்பவமே என்றும் அது பிரசித்தப் பெற்றதோ அல்லது இகழ்ச்சிக்கிக்குரியதோ அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்ட சோதனை என்று தான் கூற முடியும். இந்திய திருநாட்டை உலகளவில் தலைகுனிய வைத்த இந்த சம்பவத்தை அரங்கேற்ற மூலகாரணமாக இருந்த இந்த இந்து தீவிரவாதிகளான அத்வானி, பால்தாக்கரே, உமாபாரதி போன்ற ௨௦ தீவிரவாதிகளின் மீது சதி திட்டத்தை தீட்டிய குற்றத்திலிருந்து நீக்குவதாக கீழ்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம், அதை மறு விசாரணை செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை வைத்துதான் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. 


கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதர்க்காக இந்திய அரசியல் சாசன சட்டத்தின் வேரான நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தப்பிக்கக்கூடாது என்ற தத்துவத்தையே உடைத்தெறிந்து நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை வழங்கிய இந்த நீதிமன்றத்திடம் இதை எதிர்பார்ப்பது கஷ்டம் தான்.ஆட்சியாளர்களும், நீதிவாங்களும்,அதிகாரவர்க்கமும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் பொறுமைக்கும் எல்லை உண்டு அரபுலகில் நடைபெற்ற மக்கள் புரட்சி ஏதோ பழைய புத்தகத்தில் படித்த வரலாறு அல்ல, நடைமுறையில் நடக்கக்கூடிய முன்மாதிரி தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


முஹம்மது அபூபக்கர்

No comments:

Post a Comment