Friday, January 20, 2012

உ.பி சட்டப்பேரவை தேர்தல்:எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு


புதுடெல்லி: அடுத்த மாதம் துவங்கவிருக்கும் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடுகிறது.


குர்ஷித் அலி ஜாமி(ஆர்யா நகர்), ஷக்கீல் அஹ்மத் முஹம்மதி(ஸிஸாமாவு), வழக்கறிஞர் ஹாரூன் அஹ்மத்(சைல்), ஷஃபாத் கான்(ஹமீர்பூர்), பல்வந்த்சிங் சார்வக்(ராம்பூர்மனிஹரன்), மவ்லானா மஸூத்(தேவ்பந்த்), மவ்லானா ஷாஹதப்(புடானா), வழக்கறிஞர் ராவு மிராஜுத்தீன (காத்தோளி), மவ்லானா அப்துல் காலிக்(டான்பூர்), ரஈஸ் அஹ்மத்(தக்கூர் துவாரா) ஆகிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் ஜனநாயக சீர்குலைவிற்கும், அரசியல் கட்சிகளின் ஊழலுக்கு எதிராகவும் மக்களை ஒன்றிணைக்கும் விதமாக பிரச்சாரம் செய்வோம் என எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத், ஹாஃபிஸ் மன்சூர் அலிகான், மாநில தலைவர் வழக்கறிஞர் ஷரஃபுத்தீன் அஹ்மது ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment