லண்டன்:உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் உருவாக்கும் பீதியை குறித்து கவலை அடையும் வேளையில் இந்தியாவில் மட்டும் அதிகமாக மக்களால் விவாதிக்கப்படுவது ஊழல் என பி.பி.சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
23 நாடுகளில் 11 ஆயிரம் நபர்களிடம் பி.பி.சி க்ளோபல் சேவை நடத்திய ஆய்வில் இவ்விபரம் தெரியவந்துள்ளது.
இந்தியாவை தவிர நைஜீரியா, இந்தோனேஷியா, பெரு ஆகிய நாடுகளிலும் ஊழல் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான சர்ச்சை வேலையில்லா திண்டாட்டமாகும். 18 சதவீதம் பேர் வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சனை என கூறுகின்றனர்.
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வறுமை ஆகியன இவ்வாண்டும் மக்கள் அதிகமாக விவாதித்த இதர விஷயங்களாகும்.
No comments:
Post a Comment