ஹேக்:மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவை சார்ந்த முஸ்லிம் பெண்மணி ஃபாத்திமா பின்த் ஸவ்தா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்குரைஞராக (chief prosecutor) நியமிக்கப்பட உள்ளார்.
ஐ.நா தலைமையகத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். 120 நாடுகளிலிருந்து ஃபாத்திமா பின் ஸவ்தா மட்டுமே இப்பதவிக்கு பரிசீலனையில் உள்ளார். தற்போது துணை வழக்குரைஞராக இருக்கும் ஃபாத்திமா, லூயிஸ் மோரேனோ ஒகாம்போ பதவி விலகும் ஜூன் மாதம் பதவி ஏற்பார்.
அர்ஜண்டினாவை சார்ந்த ஒகாம்போ சூடான் அதிபர் உமர் அல் பஷீர், கொலை செய்யப்பட்ட லிபியா அதிபர் முஅம்மர் கத்தாஃபி ஆகியோர் மீது கைது வாரண்டை பிறப்பித்தவர் ஆவார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆப்பிரிக்க நாடுகளை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் ஃபாத்திமா பின்த் ஸவ்தாவின் நியமனம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment