முஸ்லிம்களை மட்டுமல்ல, இந்த தேசத்தை
நேசிக்கும் அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் அணையாத நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
1992-டிசம்பர் ஆறாம் நாள் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட ஹிந்துத்துவ சங்க்பரிவார பாசிச பயங்கரவாத மூத்த தலைவர்களின் முன்னிலையில் மத வெறிப்பிடித்த காவி கழிசடைகள் பாப்ரி மஸ்ஜிதை இடித்து தள்ளி 19 ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும் இதுவரை அந்த பயங்கரவாத செயலை புரிந்த காவி பயங்கரவாதிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவரவோ, தண்டிக்கவோ இந்தியாவின் ஆட்சியாளர்களாலோ, அதிகார வர்க்கத்தினாலோ, நீதிபீடங்களினாலோ இயலவில்லை.
ஐந்நூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் ஏக இறைவனை வணங்குவதற்கு உபயோகித்த பாப்ரி மஸ்ஜித் பொய்ப் பிரச்சாரங்கள், கட்டுக்கதைகள் ஆகியவற்றின் பின்புலத்தில் தகர்க்கப்பட்ட வேளையில், மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் கட்டித் தரப்படும் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அளித்த வாக்குறுதி காற்றில் கரைந்துபோனது. மிகவும் காலம் தாழ்ந்தாவது பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் தயார் செய்த அறிக்கையில், இந்த பயங்கரவாத செயலை புரிந்த ஹிந்துத்துவா பயங்கரவாத தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டு கூறிய பொழுதிலும், அவர்களை நோக்கி ஒரு சிறு விரலை கூட அசைக்க ஆட்சியாளர்களால் முடியவில்லை.
மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்றமோ, ஆவணங்கள்
மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நீதியின் அடிப்படையிலான தீர்ப்பை வழங்குவதற்கு பதிலாக நாட்டாண்மையாக மாறி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்றாக பங்குவைத்து வழங்குவதாக தீர்ப்பளித்ததன் மூலம் தேசத்தை அவநம்பிக்கையில் ஆழ்த்தியது. இந்த தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தபொழுதிலும் இதுத்தொடர்பான மனுக்கள் தற்பொழுதும் நீதிமன்றத்தில் விசாரணைக்காக காத்திருக்கின்றன.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் மூலம் நீதிமறுக்கப்பட்ட இந்திய முஸ்லிம்கள் இனப் படுகொலைகள் மற்றும் கலவரங்களில் மேலும் மேலும் துவசம் செய்யப்பட்டனர். இருந்தபோதிலும் அவர்கள் நீதிக்கான போராட்டத்தை தொடர்கிறார்கள். இன்று தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கறுப்பு தினம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக நீதியை விரும்பும் மக்களின் உள்ளங்களில் பாப்ரி என்றும் நினைவில் நிற்கும்.
சத்தியம் வெற்றி பெற்று நீதி கிடைக்கும் ஒரு தினத்திற்காக இந்தியாவில் முஸ்லிம்களும், மதசார்பற்றவாதிகளும் காத்திருக்கின்றார்கள்! இறைவன் நாடினால் அந்த நாள் நிச்சயம் புலரும்!
No comments:
Post a Comment