ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி-விஞ்ஞான-கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் தலைமையகத்தில் இனி ஃபலஸ்தீன் கொடியும் பறக்கும்.
பாரிஸில் யுனெஸ்கோ தலைமையகத்தில் நடந்த கொடி ஏற்று நிகழ்ச்சியில் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் இரினா பொகோவா ஆகியோர் பங்கேற்றனர்.
ஃபலஸ்தீன் தேசிய கீதத்தின் பின்னணியில் பச்சை, கறுப்பு, வெள்ளை ஆகிய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. ஃபலஸ்தீனுக்கு யுனெஸ்கோவில் பூரண உறுப்பினர் பதவி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யுனெஸ்கோவின் தலைமையகத்தில் ஃபலஸ்தீன் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ஃபலஸ்தீனின் பூரண உறுப்பினர் பதவியை அங்கீகரித்ததன் மூலம் ஃபலஸ்தீன் நாடு என்ற அங்கீகாரத்தை வழங்கிய முதல் ஐ.நா அமைப்பாக யுனெஸ்கோ மாறியது.
No comments:
Post a Comment