ஹேக்:லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் படுகொலை போர் குற்றம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சர்வதேச நீதிமன்றத்தின் முதன்மை வழக்குரைஞர் லூயிஸ் மோரீனோ ஒகாம்போ தெரிவித்துள்ளார்.
லிபியாவில் தேசிய இடைக்கால கவுன்சிலுடன்(என்.டி.சி) இதுக்குறித்த சந்தேகத்தை பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முழுமையான விசாரணைக்கு என்.டி.சி தயாராகி வருகிறது. கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாமை லிபியாவில் வைத்தே விசாரிக்கப்படும் என ஒகாம்போ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி கத்தாஃபியின் பிறந்த நகரமான ஸிர்த்தில் வைத்து அவரை பிடித்த புரட்சி படையினர் பின்னர் படுகொலைச் செய்தனர். மோதலில்தான் கத்தாஃபி கொல்லப்பட்டார் என என்.டி.சி அறிவித்தபோதிலும் காயங்களுடன் பிடிக்கப்பட்டு பின்னர் கத்தாஃபி கொல்லப்படும் வீடியோ காட்சி வெளியானது.
சர்வதேச அளவில் அழுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து விசாரணை நடத்த என்.டி.சி உறுதி அளித்தது. கத்தாஃபியின் இளைய மகன் முஃதஸிம்மும் கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment