சவுதி அரேபியாவின் தகவல் அமைச்சக செய்திதொடர்பாளர் அப்துர் ரஹ்மான் அல்-ஹச்சா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அடுத்த வருடம் ஜெத்தா நகரில் வைத்து சர்வதேச இஸ்லாமிய ஊடக கருத்தரங்கம் நடைபெறுவதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் தகவல் அமைச்சகம் செய்துவருவதாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது "சர்வதேச அளவில் இஸ்லாமிய ஊடகத்தின் வளர்ச்சி பின்தங்கிய நிலையில் உள்ளது, தனது திறனை மேம்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய முயற்சிகளை பற்றி விரிவாக அலசப்படும். மேற்கத்திய ஊடகங்களால் இஸ்லாமிய உலகம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, இதை நல்ல பயிற்சியோடு உள்ள இளைங்கர்களால் மட்டுமே எதிர்த்து போராட முடியும்."
No comments:
Post a Comment