எகிப்து: முன்னாள் அதிபர் முபாரக் மீதான விசாரணை மீண்டும் தொடக்கம்.
கைரோ: கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற அரபு வசந்தத்தின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார் என்று முன்னாள் அதிபர் முபாரக் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன, இதில் முன்னாள் அமைச்சர்களும் அடங்கும். பொதுமக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைய காரணமாக இருந்ததற்கு தூக்கு தண்டனை வழங்கபடலாம் என்று எதிர்பர்க்கபடுகிறது.
No comments:
Post a Comment