வாஷிங்டன்:ஃபலஸ்தீன் மக்கள் என்பது புனையப்பட்டது என அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிட இருக்கும் குடியரசு கட்சியின் தலைவர் நியூட் கின்க்ரிச் கூறியுள்ளார்.
லோவாவில் குடியரசு வேட்பாளர்கள் பங்கேற்ற விவாதத்தில் கின்க்ரிச் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். முன்பு அமெரிக்காவில் இஸ்ரேல் ஆதரவு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதையே தற்பொழுது மீண்டும் தெரிவித்துள்ளார் கின்க்ரிச்.
கின்க்ரிச்சின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது கூற்றை அங்கீகரிக்க இயலாது என்றும், இரு நாடுகள் தீர்வை ஏற்றுக்கொள்ள இஸ்ரேலிய அரசும், அமெரிக்க யூதர்களும் தயாராகவேண்டும் என டெமோக்ரேடிக் செனட்டர் கார்ல் லெவின் தெரிவித்துள்ளார். கின்க்ரிச் தீர்விற்கான வழியை கூறவில்லை என லெனின் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் ஆதரவாளர்களின் துணையுடன் ஆட்சியை கைப்பற்ற குடியரசு கட்சி உறுப்பினர்கள் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உண்மையுடன் எவ்விதமும் பொருந்தாத வார்த்தைகளை கின்க்ரிச் மொழிந்ததாக ஃபலஸ்தீன் பாராளுமன்ற உறுப்பினர் ஹன்னான் அஷ்ரஃபி தெரிவித்துள்ளார். சமாதான முயற்சிகள் துவங்கவிருக்கும் வேளையில் நெருக்கடியை உருவாக்கும் முயற்சி என மாஸேசூட்ஸ் ஆளுநர் மிட் ரோம்னி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment