துனீஸ்:வட ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் புதிய அரசை உருவாக்க வழிவகுக்கும் இடைக்கால அரசியல் சட்டத்திற்கு பாராளுமன்ற அவை அங்கீகாரம் அளித்துள்ளது.
217 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 141 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 37 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 39 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.ஐந்து நாட்களாக நீண்ட சூடான விவாதத்திற்கு பிறகு இடைக்கால அரசியல் சட்டத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்தது. இதனால் ஜனநாயக புரட்சி முடிந்து இரண்டு மாதத்திற்குள் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற அந்நஹ்ழா தலைமையிலான கூட்டணி அரசு வருகிற திங்கள் கிழமை பதவியேற்கும்.
துனீசியாவின் வரலாற்றில் இடைக்கால அரசியல் சட்டம் ஒரு மைல்கல் என பேரவை தலைவர் முஸ்தஃபா பின் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அரசியல் சட்டத்தில் சில பிரிவுகளை கண்டித்து எதிர்கட்சிகள் தலைமையில் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடந்தது. துனீசியா வம்சாவழியைச் சார்ந்த பெற்றோருக்கு பிறந்த முஸ்லிம்கள் மட்டுமே அதிபர் பதவிக்கு போட்டியிட இயலும் என்ற அரசியல் சட்டப்பிரிவை கண்டித்துதான் போராட்டம் நடந்தது.
இடைக்கால அரசியல் சட்டத்தின் காலாவதி பொது தேர்தல் நடைபெறும் வரையிலாகும்.
No comments:
Post a Comment