மாஸ்கோ:இந்தியாவும்,ரஷ்யாவும் இணந்து உருவாக்கியிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை(ரியாக்டர்) இன்னும் சில வாரங்கலில் செயல்பட துவங்கும் என பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யாவில் அந்நாட்டின் பிரதமர் திமித்ரி மெத்வதேவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டாக நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
முதல் அணுஉலை அடுத்த சில வாரங்களில் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்த மன்மோகன்சிங், இரண்டாவது அணுஉலை 6 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார். ஆனால், எதிர்பார்த்தபடி கூடங்குளத்தின் மூன்றாவது
மற்றும் நான்காவது அணு உலைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
மற்றும் நான்காவது அணு உலைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பால் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் செயல்படுவது தொடர்பான சந்தேகங்கள் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
நிருபர்கள் முன்னிலையில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா சார்பில் சம்பந்தப்பட்ட துறையின் செயலர் மற்றும் ரஷியாவுக்கான இந்தியத் தூதரும், ரஷியத் தரப்பில் சம்பந்தப்பட்ட செயலர்களும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு இந்தியப் பிரதமரும், ரஷிய அதிபரும் பதிலளித்தனர்.
“ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதில் ரஷியா ஆர்வமாக இருக்கிறது. ஏனைய உறுப்பினர்களும் அங்கீகாரம் அளித்தால் மட்டுமே அது சாத்தியம். இந்தப் பிரச்னையில் ரஷியாவின் தயக்கமே இல்லாத முழுமனதான ஆதரவு இந்தியாவுக்கு உண்டு” என்று ரஷிய அதிபர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்தார்.
தொடர்ந்து, கூடங்குளம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது, பல ரஷிய நிருபர்களும் துணைக் கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதில் தற்காலிகமாக சில தடங்கல்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை அகற்றுவதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை அகற்றும் முயற்சியில் அரசு பெருமளவு வெற்றி அடைந்து விட்டிருப்பதாகவும் கூடங்குளத்தில் மக்களின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்பதில் இரு நாடுகளும் தெளிவாக இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அகுலா-2 பிரிவைச் சேர்ந்த ‘நெர்பா’ என்கிற அணுஆயுதத் தாக்குதல் நடத்தவல்ல நீர் மூழ்க்கிக் கப்பலை இம்மாத இறுதிக்குள் இந்தியாவுக்கு வழங்க ரஷியா திட்டமிட்டிருக்கிறது. ரஷிய ராணுவத் தொழில்நுட்ப அமைப்பின் தலைவர் திமித்ரியேவ் இதைத் தெரிவித்தார்.
பல மாதங்கள் வரை நீருக்கு அடியிலேயே இருக்கும் திறன் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவில் ‘ஐஎன்எஸ் சக்ரா’ என்கிற பெயரில் செயல்படும். 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் 300 ஏவுகணைகளை இந்த நீர்மூழ்கிக் கப்பலால் எடுத்துச் செல்ல முடியும்.
No comments:
Post a Comment