Friday, January 6, 2012

எகிப்து: முபாரக்கை தூக்கில் போடுங்கள் - நீதிமன்றில் கோரிக்கை


எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக். இவரது 32 ஆண்டுக்கால ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டது. இப்புரட்சி கடந்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தொடங்கி 18 நாட்கள் நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.


அதை தொடர்ந்து முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அங்கு ராணுவ ஆட்சி உள்ளது. ராணுவ ஆட்சியாளர்கள் முபாரக்கையும், அவரது 2 மகன்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

தற்போது முபாரக் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. அதில், அரசு தலைமை வக்கீல் முஸ்தபா சுலைமான் காதர் ஆஜராகி வாதாடினார். அப்போது, மக்களின் பாதுகாப்புக்கு அதிபர்தான் பொறுப்பு. ஆனால் அவரே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சுட்டுக்கொல்லும் படி ராணுவத்துக்கு உத்தர விட்டுள்ளார்.

வன்முறை சம்பவங்களை தடுக்க அவர் தவறி விட்டார்.எனவே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழக்க காரணமாக இருந்த முபாரக்கை தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தினார். தற்போது இந்த வழக்கு விசாரணை விறு விறுப்பாக நடந்து வருகிறது. 

No comments:

Post a Comment