கடந்த 15 நாட்களுக்கு முன்பு, துபாயிலிருந்து 100 பயணிகளுடன் மிசி 612 என்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கிளம்பியது. துபாய் நேரப்படி இரவு1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது.
பின்னர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பை கிளம்பியது. ஆனால் கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கி விட்டு முதலில் ஒரு விமானி தூக்கத்தில் ஆழ்ந்தார். இதைத் தொடர்ந்து துணை விமானியும் தூங்கி விட்டார்.
இதையடுத்து மும்பை விமான கட்டுப்பாட்டு நிலையம் விமானத்தைத் தொடர்பு கொண்டதும் விமானத்திலுள்ள அலாரம் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அதைக் கேட்டு திடுக்கிட்டு இரு விமானிகளும் விழித்துள்ளனர்.
இதற்கிடையே ஏர் இந்தியா விமானம் மும்பை வான்வெளியைத் தாண்டி கோவாவுக்குப் பாதி தூரம் வரை போய் விட்டது. இதையடுத்து இரு விமானிகளும் விமானத்தை திருப்பி மும்பையில் தரையிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டு 158 உயிர்களை பலி கொடுத்த மங்களூர் விமான விபத்து விமானிகளின் தூக்கத்தால் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment