Monday, January 30, 2012

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முடியாது :பிரணாப் முகர்ஜி !


ஈரானிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடும் என இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இரு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் சிகாகோவில் உரையாற்றூகையில் இவ்வாறு தெரிவித்தார். 
ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரானிடமிருந்து, பிறநாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்வதை இடைநிறுத்தி கொள்ள வேண்டும் என ஐ.நா கோரிக்கை விடுத்தது.



ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல மேற்கத்திய நாடுகள் ஈரானுக்கு கடும் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இத்தடைகளை அங்கீகரித்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவால் இவ்வாறு எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள முடியாது என பிரணாப் முகர்ஜி கூறினார். சர்வதேச அளவில், எண்ணெய் பயன்பாட்டில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு தேவையான எண்ணெயில் 12% வீதம் ஈரானிடமிருந்தே கிடைக்கப்பெறுகிறது. இதனை இந்தியா நிறுத்தினால், அது தமது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என அவர் கூறினார்.

3 comments:

Anonymous said...

Vaare vaa India vaa. Good Mr.Pranaap G.

Anonymous said...

kalakurel poge, niruthunal economic down ayirumle athaan

Anonymous said...

good thinking pranap keep it up because iran have more techno......

Post a Comment