Thursday, January 5, 2012

பாரசீக வளைகுடாவில் எமது பணி தொடரும் - அமெரிக்கா சூளுரை


மேலும் அவர் கூறியதாவது: சர்வதேச சட்டங்களின் அடிப்படையில்தான் எங்களின் கடற்படை வளைகுடா கடற்பகுதியில் தொடர்கிறது. பிராந்தியத்தில் கடல் போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துவதும், ஸ்திரத்தன்மையை உறுதிச்செய்வதும் அமெரிக்க படையினர் ஆவர். பல பத்தாண்டுகளாக தொடரும் இப்பணியை நாங்கள் தொடர்வோம். அண்டை நாடுகளுடன் நல்ல உறவை ஏற்படுத்த ஈரான் முயலும் என நம்புகிறோம்’ என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஈரானின் எச்சரிக்கையை வெள்ளைமாளிகை நிராகரித்துள்ளது. ‘சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கையை தொடர்ந்து சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தனிமையை அனுபவிப்பதால் ஈரான் இத்தகைய மிரட்டல்களை விடுக்கிறது’ என வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜே கார்னே கூறியுள்ளார்.

No comments:

Post a Comment